Tamil News
“ஸாரி டாடி, ஐ மிஸ் யூ” – தே.ர்த.லில் தோல்வி அடைந்த தந்தையின் போனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மகள் செய்த பகீர் காரியம்…!!
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தே.ர்த.ல் நடைபெற்று முடிந்தது.
இதில் பதிவான வாக்குகளை எண்ணிக்கை பணி நேற்று முடிவடைந்தது.
இதில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியம் ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மகள் வான்மதி (வயது 22), இவர் ஆலம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி,காம் படித்து வருகிறார்.
இவரது தந்தை சம்பத் விவசாயி. இவர் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தே.ர்த.லில் ஆசூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இதில் 65 வாக்குகள் வித்தியாசத்தில் சம்பத் தோல்வி அடைந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட வான்மதி அவரது தந்தைக்கு சாரி டாடி ஐ மிஸ் யூ என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்து பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
செய்தியை அறிந்த சம்பத் உறவினர்களுடன் மகளை பல்வேறு இடங்களில் தேடினார்.
அப்போது அவருக்கு சொந்தமான விவசாய கி.ணற்.றில் கு.தித்.து தன் உயிரை மா.ய்த்.து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
