Viral News
1 ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டிக்கு அடித்தது அதிர்ஷ்டம்….!! மனிதநேயம் கொண்ட பாட்டிக்கு வாழ்த்துக்கள்…!! புதிய வீடு கட்டிக்கொடுக்கும் ஆனந்த் மகிந்திரா ….!!
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி சேவை புரிந்து வந்த கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் சார்பில் சொந்த வீடு கட்டி தருவதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது தள்ளுவண்டி கடைகளில் கூட ஒரு இட்லி குறைந்தது 5 ரூபாய் முதல் 7 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதுவே ஸ்டார் ஓட்டல்களில் 50 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது..
ஆனால் யார் எப்படி விலை வைத்து விற்றாலும் நான் ஒரு ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன் என்று இன்று வரை அதை செய்து வருகிறார் கோவை ஆலாந்துறையை அடுத்துள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த கமலாத்தாள் பாட்டி.
85 வயதாகும் கமலாத்தாள் பாட்டி, ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கிறார். யாருமே உதவிக்கு இல்லாமல் தனி ஆளாகவே 30 வருஷமாக இந்த இட்லி கடையை நடத்தி வருகிறார்.
அவரே இட்லி, சட்னி, சாம்பார் தருகிறார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். அதற்கு பிறகுதான் விலையைகூட்டி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் , பாட்டி தனது சேவையை நிறுத்தவில்லை.
அப்போதும் பாட்டியின் சேவை தொடர்ந்தது. பாட்டியின் சேவையை பாராட்டி, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கினர்.
மேலும் விரைவில் பாட்டிக்கு வீடு ஒன்றை கட்டி கொடுக்க போவதாக உறுதியளித்தார்
இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கி உள்ளது.
மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கி உள்ளது.
