Viral News
விபத்தில் ஒரு காலை இழந்த போதிலும், ஒரு காலால் குதித்து குதித்து 1 கி.மீ. தூரம் உள்ள பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் சிறுமி; நெஞ்சை உருக்கும் சோகம்…!
விபத்தில் ஒரு காலை இழந்தாலும், கல்வி கற்கும் ஆர்வத்தால் தினமும் ஒரு காலில் குதித்துக் குதித்து பள்ளிக்குச் சென்று வருகிறார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா.
பீகாரின் ஜாமுய் மாவட்டத்தில் வசிக்கும் சீமா மான்ஜி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கியதில், ஒரு கால் பறிபோனது.
காலை இழந்தாலும் அந்தச் சிறுமி நம்பிக்கையை இழக்கவில்லை. படிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.
சீமாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பள்ளிக்கூடம் உள்ள நிலையில், தினமும் ஒற்றைக் காலால் குதித்து குதித்தே பள்ளிக்கூடம் சென்று வருகிறார் சீமா.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து அவர் கூறியதாவது, “நான் 4 ஆம் வகுப்பு படிக்கிறேன், என் வீட்டிலிருந்து பள்ளிக்கு உள்ள தூரத்தை நடந்தே செல்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நான் 4 ஆம் வகுப்பு படிக்கிறேன், என் வீட்டிலிருந்து பள்ளிக்கு உள்ள தூரத்தை நடந்தே செல்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அவளுக்கு உதவ பலர் முன் வந்த நிலையில், ஜமுய் மாவட்ட கலெக்டர் அவளது வீட்டிற்கு சென்று, சிறுமிக்கு ஒரு மூன்று சக்கர வண்டியை பரிசாக அளித்து அவளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
மேலும், சிறுமிக்கு செயற்கை கால் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
சீமா நக்சல்களால் பாதிக்கப்பட்ட பதேபூர் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
சீமாவின் தந்தை கிரண் மஞ்சி ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாக வேறு இடத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது தாயார் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.
ஆனால், பல சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த சிறுமி, எதிர்காலத்தில் தான் ஒரு ஆசிரியையாக வேண்டும் என்ற கனவை கைவிடவில்லை.
அவருடைய மனஉறுதியை, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் நடிகர் சோனு சூட் வரை பலரும் சீமாவை பாராட்டி வருகின்றனர்.
हमें गर्व है कि हमारे प्रदेश के बच्चे शिक्षा के प्रति जागरूक हो रहे हैं, सभी बाधाओं को पार कर शिक्षा ग्रहण कर रहे हैं।
सीमा एवं उसके जैसे हर बच्चे को चिन्हित कर उन्हें यथोचित सहायता मुहैया करवाई जायेगी। बहरहाल बिटिया तक जरूरी मदद पहुंचाई गई है। @NitishKumar @Jduonline #Bihar pic.twitter.com/PidkCvrQZN
— Dr. Ashok Choudhary (@AshokChoudhaary) May 25, 2022
