Viral News
17 ஆண்டுகளாக அம்பாசிடர் காருக்குள் அடர்ந்த காட்டில் வாழும் முதியவர்; ஏன் தெரியுமா…!!
தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள நெக்கரே கிராமத்தில் கடந்த 2000ம் ஆண்டு 1.5 ஏக்கர் நிலங்கள் உடன் சந்திரசேகர் என்பவர் வசதியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய காரை தவிர அனைத்தையும் ஜப்தி செய்தனர்.
வங்கி நடைவடிக்கைகளால் வீட்டை விட்டு வெளியேறிய சந்திரசேகர், தனது தங்கை வீட்டில் த.ஞ்ச.மடைந்து வாழ்ந்துவந்தார்.
அங்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் அவர் தன்னுடைய காருடன் அடர்ந்த வனத்தில் வாழ ஆரம்பித்து 17 ஆண்டுகள் ஆகி விட்டது.
இவரின் வசிப்பிடத்தை அடைவது கொஞ்சம் க.டி.னமானது தான். காட்டுக்குள் 3-4 கிமீ தூரம் நடக்க வேண்டும்.
சிறிது தூரம் சென்ற பிறகு, மூங்கில் கம்புகள் தாங்கியிருக்கும் ஒரு சிறிய பிளாஸ்டிக் தாள் தெரியும். அதன் அருகில், ஒரு பழைய வெள்ளை அம்பாசிடர் காரும், அதன் பானெட்டில் மிகவும் பழைய ஆனால் செயல்படும் ஒரு வானொலியும் உங்களை வரவேற்கும்.
பல ஆண்டுகள் வனவாசத்தால், கார் அதன் நிறத்தையும் அடையாளத்தையும் இழந்துவிட்டது.
உறுதியான தோற்றம், அரை வழுக்கையான தலை மற்றும் சவரம் செய்யாத முடி, 2 ஜோடி ஆடைகள் கொண்ட மற்றும் ஒரு ஜோடி ரப்பர் செருப்புகள் கொண்ட ஒரு மெ.லிந்த மனிதர், வனப்பகுதியில் வாழ்வுக்குத் தன்னை மாற்றிக் கொண்டவர் சந்திரசேகர்.
தன்னுடைய ஒரே லட்சியம் வங்கியிடமிருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்பதே என்று கூறுகிறார்
