Connect with us

    76 வயது மூதாட்டியின் அழகில் மயங்கி மனதை பறிகொடுத்த 19 வயது இளைஞன்; விரைவில் இருவருக்கும் டும் டும் டும்..!

    Giuseppe D'Anna

    World News

    76 வயது மூதாட்டியின் அழகில் மயங்கி மனதை பறிகொடுத்த 19 வயது இளைஞன்; விரைவில் இருவருக்கும் டும் டும் டும்..!

    இத்தாலியில் 19 வயது இளைஞர் ஒருவர், 76 வயது மூதாட்டியை காதலித்து வருகிறார்.

    Giuseppe D'Anna

    இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலை அடுத்து, இவர்களுக்கிடையே திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் அந்த இளைஞரை கிண்டல் செய்து வருகின்றனர்.

    கியூசெப் டி’அன்னா என்ற 19 வயது இளைஞர் இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்தவர்.

    அவர் தனது ஆத்ம துணையாக 76 வயதான மூதாட்டியை நிச்சயித்தக் கொண்டதாக டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

    மூதாட்டிக்கு தனது காதலை வெளிப்படுத்திய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்த புகைப்படத்தை இதுவரை 2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

    அது மட்டுமல்லாமல் டி’அன்னா, தனது வருங்கால மனைவிக்கு அளித்த வைர மோதிரத்தின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்

    டி’அன்னாவும் மூதாட்டியும் இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

    டி’அன்னாவின் பதிவுக்கு 50 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

    டி’அன்னாவின் பதிவு குறும்புதனமானது என்றும் உண்மையில் மூதாட்டி அவரின் பாட்டியாக இருப்பார் என்றும் பார்வையாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

    எனினும் ஏராளாமானார் டி’அன்னாவை டிரோல் செய்து வருகின்றனர்.

    மூதாட்டியின் வங்கி கணக்கில் எவ்வளவு மில்லியன் டாலர்கள் வைத்துள்ளார் என்றும் சிலர் கேலியாக வினவியுள்ளனர்.

    2003- ஆம் ஆண்டு பிறந்த டி’அன்னாவுக்கும் 1946- ஆம் ஆண்டு பிறந்த மூதாட்டிக்கும் 57 வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!