Viral News
“கட்டிலில் உல்லாசமாக இருப்போம்; வாங்க” – டாக்டருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய இரு பெண்கள்; இறுதியில் நடந்த சோக சம்பவம்..!
கேரள மாநிலம் திருச்சூரில் டாக்டர் ஒருவருக்கு இரு பெண்கள் ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த டாக்டர் ஷா நவாஸ்.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு நம்பரில் இருந்து ஹாய் என மெசெஜ் வந்துள்ளது.
புது நம்பரா இருக்கே என நினைத்த அவர் அதற்கு அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
தொடர்ந்து அதே நம்பரில் இருந்து மெசெஜ் வர அதனை பார்த்த டாக்டருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
பின்னர் அந்த எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட ஒரு இளம்பெண் டாக்டரிடம் சிகிச்சை தொடர்பாக சந்தேகம் கேட்பது போல பேசியுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பெண் மிகவும் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து ஷாநவாஸின் செல்போனுக்கு அதிக அளவில் ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.
பின்னர் அவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக போலிஸில் புகார் கொடுக்க உள்ளதாகவும் புகார் கொடுக்காமல் இருக்க ரூ.3 லட்சம் கொடுக்கவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
தன்னை மிரட்டிய மர்ம நபரிடம் பணம் கொடுக்க ஷாநவாஸ் மறுக்கவே, துபாயில் இருந்து ஒருவர் அவரை போனில் அழைத்து மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பயந்து போன டாக்டர் ஷா நவாஸ் உடனடியாக போலீசில் புகார் தந்தார்.
உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார் பணத்தை தருவதாக ஒப்புக்கொள்வது போல கூறி குற்றவாளிகளை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி தெரிவிக்க திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் பணத்துடன் காத்திருக்கும்படியும், பெங்களூரில் இருந்து 29 வயது பெண் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள ஸ்டேஷனுக்கு வருவார் என்றும் சொல்லப்பட்டது.
சொன்ன நாளில் டாக்டர் ஷா நவாஸ், போலீசார் ஆகியோர் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்க சம்பந்தப்பட்ட பெண் வந்துள்ளார். அவரைச் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர்.
ஷாநவாஸை மிரட்டிய 2 பேர் திருச்சூர் மன்னூத்தி பகுதியைச் சேர்ந்த நவுபியா (33) மற்றும் அவரது தோழி நிஷா (29) என தெரியவந்துள்ளது.
அவர்கள் 2 பேரையும் போலிஸார் கைது செய்து துபாயிலிருந்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
