Connect with us

    இறந்த தனது 2 வயது குழந்தையை மழையில் நனைந்த படியே 4 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை; நெஞ்சை உருக்கும் சோகம்…!

    Kid died

    Viral News

    இறந்த தனது 2 வயது குழந்தையை மழையில் நனைந்த படியே 4 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை; நெஞ்சை உருக்கும் சோகம்…!

    Kid died

    2 வயது சிறுவன் உயிரிழந்ததையறியாமல் அவனது சகோதரன் சாலையோரத்தில் மடியில் படுக்கவைத்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் மக்கள் மனதில் இருந்து மறைவதற்க்குள் இதே போன்று சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

    கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்.

    இவரது 4 மாத குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழுது புலம்பியுள்ளனர்.

    கொட்டும் மழையில் வீட்டிற்கு குழந்தையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் நின்றுள்ளார்.

    பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவரது குடியிருப்பு வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது.

    இதனால் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் தனது வீட்டிற்கு 4 கிலோ மீட்டர் தூரம் குழந்தையோடு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை கண்டு வருந்தினார்.

    இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் உடலை ஒப்படைத்த நிலையில், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம், தடிகூண்டு குடியிருப்பு பகுதி வரை குழந்தையை அய்யப்பன் கொண்டு வந்துள்ளார்.

    இதனையடுத்து குறுகிய மற்றும் மலைப்பகுதியாக இருப்பதால் அந்த பகுதிக்கு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து 4 மாத குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி அய்யப்பன் நடக்க தொடங்கினார்.

    கேரளாவில் தென் மேற்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக பலத்த மழை பெய்து வந்தது.

    இந்த மழைக்கு நடுவே அய்யப்பன் குழந்தையை கொண்டு சென்றதும், குழந்தையின் மேல் மழைத்துளி விழாமல் உடன் வந்தவர் குடைபிடித்தபடி வரும் சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    மேலும் இந்த வீடியோ காட்சி சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!