Connect with us

    சுயேட்சையாக போட்டியிட்டு, பிரதான கட்சிகளை டெபாசிட் இழக்க செய்த 22 வயது கல்லூரி மாணவி..!!

    22 yr old Candidate sneha

    Politics

    சுயேட்சையாக போட்டியிட்டு, பிரதான கட்சிகளை டெபாசிட் இழக்க செய்த 22 வயது கல்லூரி மாணவி..!!

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன.

    இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரசிய நிகழ்வுகளும் அரங்கேறியது.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட பொறியியல் மாணவி வெற்றி பெற்ற நிலையில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    22 yr old Candidate sneha

    திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பதிவான வாக்குகள் நேற்று காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் எண்ணப்பட்டது.

    இதில், திமுக 14 வார்டுகளிலும், அதிமுக, மதிமுக, விசிக, அமமுக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

    இந்த நிலையில், காட்டூர் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட தனியார் பொறியியல் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவி சினேகா (22) என்பவர் 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

    அந்த வார்டில், சினேகாவை சேர்த்து மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, 2 சுயேச்சை உள்ளிட்ட 7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தார்.

    எனினும், அமமுக வேட்பாளர் மட்டும் 191 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்தார்.

    5-வது வார்டில் மொத்தம் 1,057 வாக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!