Connect with us

    விஷம் கலந்த ஏரி நீரை குடித்த 3000 வாத்துக்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

    Ducks

    Viral News

    விஷம் கலந்த ஏரி நீரை குடித்த 3000 வாத்துக்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!

    ஆந்திரா அருகே மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற 3000 வாத்துக்கள் ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Ducks

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியில் இருப்பவர் முனி ராஜா.

    இவர் 3000 வாத்துக்களை வளர்த்து வந்தார்.

    இவர் எப்போதும் தான் வளர்க்கும் வாத்துக்களை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வார்.

    அவ்வாறு நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3000 வாத்துக்களையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

    அப்போது ஏரியில் இறங்கிய வாத்துக்கள், ஏறியில் இருந்த தண்ணீரை குடித்தவுடன் 3000 வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இறந்தன.

    இதை பார்த்த முனி ராஜா கதறி அழுதார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக ஏரியில் இருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

    பின்னர் சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து இருக்கின்றனர்.

    ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்ததால்,. விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாழ்த்துக்கள் இறந்தது தெரிய வந்ததுள்ளது.

    ஏரி தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!