Viral News
வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகளை வழங்கி அசத்திய மாமியார்; குவியும் பாராட்டுக்கள்..!!
திருமணத்திற்கு பின்பு பெண் வீட்டில் மணமகனுக்கு விருந்து வைத்து உபசரிப்பது தமிழ் பண்பாடுகளில் வழக்கமான ஒன்று.
ஆனால், ஆந்திராவில் வீட்டிற்கு வந்த வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகளை வழங்கி மாமியார் ஒருவர் விருந்து வைத்துள்ள சம்பவம் ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் -மாதவி தம்பதியின் மகள் குந்தவிக்கும் தனுக்கு பட்டணம் தும்மலப்பள்ளியை சேர்ந்த சாய் கிருஷ்ணாவுடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களின் திருமணம் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி குந்தவியின் தாத்தா கோவிந்த், பாட்டி நாகமணி ஆகியோர் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணாவிற்கு விருந்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யும் பணி நடந்தது.
இதையடுத்து குந்தவி மற்றும் சாய் கிருஷ்ணாவை தங்களது வீட்டிற்கு வரவழைத்தனர்.
30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள், சூடான மற்றும் குளிர் பானங்கள், பிஸ்கட், பழங்கள், கேக் எனச் செய்யப்பட்டு மாப்பிள்ளைக்கு அளிக்கப்பட்டது.
மேலும், 30 வகையான முறுக்கு, எல்லடை, சீடை மற்றும் பழங்கள் என 365 வகையான உணவுகள் தயார் செய்து பரிமாறப்பட்டது.
அதாவது வருடத்தில் 365 நாட்கள் வருவதை கணக்கிட்டு தனது மருமகனுக்கு 365 வகையான உணவுகளை விருந்தாக கொடுத்து அசத்தியுள்ளனர் பெண் வீட்டார்.
கொரோனா காலத்தில் பலரும் உணவின்றி தவித்து வரும் நிலையில், ஒரு நபருக்கு எதற்கு இத்தனை வகையான உணவுகள் என்றும் இவற்றை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கியிருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
