Viral News
தனது 4 பிள்ளைகளில் மூவர் ஐஏஎஸ், ஒருவர் ஐபிஎஸ் ஆக உருவாக்கிய சாதனை தந்தை; குவியும் பாராட்டுக்கள்..!!
உ.பி.யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதர, சகோதரிகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனில் பிரகாஷ் மிஸ்ரா.
இவர் கிராமிய வங்கியில் மேலாளராக உள்ளார்.
இவருக்கு யோகேஷ் மிஸ்ரா, ஷமா மிஸ்ரா, மாதுரி மிஸ்ரா, லோகேஷ் மிஸ்ரா என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
அனில் பிரகாஷுக்கு தனது நான்கு பிள்ளைகளும் நன்றாகப் படித்து அரசின் உயர் பதவிகளில் அமர வேண்டும் என ஆசைப்பட்டார்.
எனவே, அவர்களை நல்ல பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்க வைத்தார்.
மேலும், தனது பிள்ளைகள் நால்வரையும் ஐஏஎஸ் தேர்வு என பிரபலமாக அழைக்கப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.
அதன் பேரில் நான்கு பிள்ளைகளும் தாங்கள் படிக்கும் காலம் முதலே அது சம்பந்தமான பாடங்களை படித்து ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளனர்.
முதல் மகனான யோகேஷ் மிஸ்ரா பொறியியல் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானர்.
இதைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
அவரது தங்கையான இரண்டாவது பிள்ளை ஷமா மிஸ்ரா கல்லூரி படிப்பு படித்து முடித்த பின்னர் மூன்று முறை ஐஏஎஸ் தேர்வு எழுதி தோல்வியை தழுவினார்.
இருப்பினும் மனம் தளராது தனது படிப்பை தொடர்ந்த அவர், நான்காவது முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தற்போது ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார்.
மூன்றாவது பிள்ளையான மகள் மாதுரி மிஸ்ரா 2014ஆம் ஆண்டிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.
கடைசி மகனான லோகேஷ் மிஸ்ராவும் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 44 ரேங்க் எடுத்து ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார்.
இவ்வாறு தனது 4 பிள்ளைகளையும் தனது ஆசைப்படி ஐஏஎஸ் அதிகாரிகளாக உருவாக்கிவிட்டார் தந்தை அனில் மிஸ்ரா.
நான் இப்போது தலைநிமிர்ந்து வாழ்கிறேன் என்றால் அதற்கு எனது பிள்ளைகள் தான் காரணம்.
இதை விட எனக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என பெருமிதம் கொள்கிறேன் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் அனில் மிஸ்ரா.
