Tamil News
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 5 வயது தமிழக சிறுவன்; குவியும் பாராட்டுக்கள்..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார சரவணன். விவசாயி மற்றும் லாரி ஓட்டுநராக உள்ளார்.
இவரது மனைவி மனோன்மணி முதுகலை பட்டதாரி.
இவர்களது ஒரே மகன் கே.எம். தக்சின். வாலரை கேட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார்.
இவர் தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துகளில் தலா 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும் தமிழ் உயிர் எழுத்துகள் உயிர் மெய் எழுத்துகள் அடங்கிய 173 சொற்களையும் தெரிந்து வைத்துள்ளான்.
மேலும், 100 பழங்களின் பெயர்கள், 40 வாகனங்களின் பெயர்கள், 20 உடல் பாகங்கள், காய்கறிகள் 25, பழங்கள் 35, என சுமார் 800 வார்த்தைகளை தெரிந்து வைத்தள்ளார்.
இது தவிர கராத்தே மற்றும் ஸ்கேட்டிங்கும் பயன்று வருகிறார்.
சிறுவனது இந்த சாதனை யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் புத்தகத்தில் ரெக்டி மோஸ்ட் டாப்பிக்ஸ் நேம் அன்டு ஆப்ஜக்ட்ஸ் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
பியூட்சர் கலாம் புக் ஆப் ரிகார்டிலும் இவரது சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றுகள், பதக்கங்கள், அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இவரது தாயார் மனோன்மணி கூறியதாவது:
நாம் படிக்கும்போது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் ஏ என்றால் ஏ பார் ஆப்பிள் அண்ட் என 12 வார்த்தைகளை அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் எனது மகன் ஏ என்ற எழுத்தில் பத்து வார்த்தைகளும் ஏ முதல் இசட் வரை உள்ள இருபத்தி ஆறு எழுத்துகளிலும் 260 வார்த்தைகள் வாசிப்பான்.
தமிழில் அ என்றால் அம்மா என்பது போன்று எழுத்திற்கு 15 வார்த்தைகள் சொல்வான்.
இதுபோல் 173 வார்த்தைகள் தெரியும். பழங்கள் பூச்சிகள் பறவைகள் காட்டு விலங்குகள் பெயர் தெரியும். கணக்கில் ஒன்று முதல் 100 வரை சொல்வான்.
அவனுக்கு ராக்கெட் விண்வெளி குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் இவனை அவன் விரும்பும் துறையில் படிக்க வைப்போம்.
சாதனை குறித்து செய்திகளை பார்த்த எனது மகன், தானும் இதே போல் மெடல்கள் வாங்க வேண்டும் என கூறினான்
இதனையடுத்து, அவரை நெறிப்படுத்தி வழிகாட்டுதல் செய்து மற்றவர்கள் சாதனையை முறியடித்து வந்தால் தான் இது போல் மெடல் வாங்க முடியும், என ஊக்குவித்து வழிகாட்டினோம் என அவர் கூறினார்.
