Viral News
50 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன்; அதன்பின் நடந்த விபரீதம்..!!
ஒவ்வொரு நாளும் நாளேடுகளை திருப்பினால் கள்ளக்காதல், பாலியல் வன்கொடுமை சம்பந்தமான செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது.
அந்த அளவிற்கு நம் சமூகம் சீரழிந்து புரையோடி போய் இருக்கிறது.
மாறிவரும் கலாச்சாரம், ஒழுக்கமின்மையே இதற்கு மூல காரணமாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், கேரள மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 50 வயது பெண்ணை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை அடுத்த நிலம்பூர் பகுதியில் வசித்துவரும் 50 வயது மதிக்கத்தக்க பெண் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இதை அறிந்து அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளான்.
மேலும், அருகில் இருந்த ஒரு சுத்தியலால் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளான் அந்த சிறுவன்.
போகும் போது அந்த வீட்டில் இருந்த இரண்டு செல்போன்களை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டான்.
சிறுவன் வீட்டிலிருந்து ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்க்குள் சென்று பார்த்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த போது பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து அருகில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
