Connect with us

    தனது மகனின் கருவை வயிற்றில் சுமக்கும் தாய்; இப்படியும் ஒரு நிகழ்வா?? அதிசயிக்கும் இணையவாசிகள்..!

    Nancy Hauck

    World News

    தனது மகனின் கருவை வயிற்றில் சுமக்கும் தாய்; இப்படியும் ஒரு நிகழ்வா?? அதிசயிக்கும் இணையவாசிகள்..!

    அமெரிக்க நாட்டில் ஒரு தாய் தனது மகனுக்கே வாடகை தாயாக மாறி இருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

    Nancy Hauck

    அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது.

    இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

    இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப் சிகிச்சை பெற்றுவந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு வேரா மற்றும் அய்வா என்ற இரட்டையர்கள் பிறந்தனர்.

    தற்போது இருவருக்கும் 3 வயதாகிறது. இதனையடுத்து டிஸீல் மற்றும் லூகா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் கேம்பிரியா.

    ஆனால், பிரசவத்தின்போது அவருடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. வேறுவழியின்றி கேம்பிரியாவின் கருப்பையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

    ஆகவே அவரால் மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க முடியாமல் போனது.

    இருப்பினும், ஜெஃப் ஹாக் மேலும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறார்.

    ஆனால், கேம்பிரியாவால் மீண்டும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரது கணவர் ஜெஃப் ஹாக் மிகவும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

    Nancy Hauck

    இந்த அதிர்ச்சியில் இருந்த அவருக்கு அவருடைய தாய் ஆறுதல் கூறியிருக்கிறார்.

    இருப்பினும், இந்த தம்பதியின் கருக்கள் சேமிப்பில் இருப்பதை அறிந்த நான்சி புதிய ஆலோசனையை வழங்கியிருக்கிறார்.

    மகன் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதை கண்ட தாய் வாடகை தாயாக இருக்க முடிவெடுத்துள்ளார்.

    அதன்படி தனது மகனின் உயிரணுவையும், மருமகளின் கரு முட்டையையும் கொண்டு அவர் கர்ப்பமாகியுள்ளார்.

    வரும் நவம்பர் மாதம் நான்சிக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.

    இதுபற்றி பேசிய அவர்,”நான் எனது மகனை சுமந்தது போலவே தற்போது என் பேத்தியையும் சுமக்கிறேன்.

    குழந்தையை மிகவும் எனது மகன் மற்றும் மருமகள் விரும்புகின்றனர்.

    ஆகவே அவர்களுக்கு நான் உதவ நினைத்தேன். முன்னெப்போதையும் விட நான் வலிமையாக உணர்கிறேன்.

    26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குழந்தையை சுமப்பது பல உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

    என் மகனிடம் அவனுடைய குழந்தையை ஒப்படைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

    தன் மகனுக்காக பெற்ற தாயே வாடகை தாயாக மாறியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!