Tamil News
நாய் துரத்தியதால், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு…!
பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் 9 மணிநேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த சிறுவனை நாய்கள் சில துரத்தியுள்ளது.
இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கினான்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கபட்டான்.
இந்த துயரச் செய்தியை அறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதோடு, சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
