Connect with us

    6 வயது சிறுமிமை பாலியல் வன்கொடுமை செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்; கதறி அழுத சிறுமி; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

    Girl abused by vck party member

    Tamil News

    6 வயது சிறுமிமை பாலியல் வன்கொடுமை செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்; கதறி அழுத சிறுமி; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!

    தென்காசி அருகே 6 வயது சிறுமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Girl abused by vck party member

    தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி ஒருவரின் மகள் குணராமநல்லூர் அரசு பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சிறுமி பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் அதே பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வீராசாமி என்பவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை தனிமையில் அழைத்து சென்று தவறுதலாக நடந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சிறுமிக்கு வயிறு வலி ஏற்படுவே பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

    பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து சிறுமி நடந்த உண்மையை கூறியதன் அடிப்படையில் பெற்றோர் தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகார் குறித்து விசாரணை செய்த குற்றாலம் காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்ட வீராச்சாமி என்பவரை விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வீராச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

    மேலும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!