Connect with us

    ஓவர் நைட்டில் சூப்பர் மாடலாக மாறிய 60 வயது கூலித் தொழிலாளி மம்மிகா ( Mammika); வைரலாகும் புகைப்படங்கள்..!!

    Mammika

    Viral News

    ஓவர் நைட்டில் சூப்பர் மாடலாக மாறிய 60 வயது கூலித் தொழிலாளி மம்மிகா ( Mammika); வைரலாகும் புகைப்படங்கள்..!!

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மம்மிகா ( Mammika ) என்ற 60 வயது சாதாரண கூலித்தொழிலாளியை மேக்கப் கலைஞரான மஜ்னாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் சேர்ந்து சூப்பர் மாடலாக மாற்றி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

    Mammika

    தனிப்பட்ட திறமைகளை கொண்ட எவரும் ஒரே இரவில் நட்சத்திரமாகவோ அல்லது பிரபலமாக மாறலாம்.

    பல சாதாரண மனிதர்கள் அவர்களின் பாடல், நடனத் திறமையால் வைரலாவதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அந்த வகையில் இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் கேரளாவை சேர்ந்த 60 வயதான கூலி வேலை செய்யும் மம்மிகா தாத்தா.

    மங்கிப்போன லுங்கியும், நிறம் மாறிய பழைய சட்டை கொண்ட மம்மிகா சமீபத்தில் ஆடை அணியும் நிறுவனத்திற்கான விளம்பர போட்டோஷூட்டை முடித்துள்ளார்.

    கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்த மம்மிக்கா, சொந்த ஊரில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.

    அழுக்கு சட்டை, நைந்துப் போன லுங்கி என்ற வேஷத்தில் சுற்றி திரிந்து கொண்டு வந்தவரை, மேக்கப் கலைஞர் மஜ்னாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆஷிக் ஃபுவாத் மற்றும் ஷபீப் வயலில் ஆகியோர் இணைத்து சூப்பர் டூப்பர் மாடலாக மாற்றியுள்ளனர்.

    Mammika

    மேலும் மம்மிகாவின் மாடலிங் திறமையைக் கண்டறிந்த புகைப்படக் கலைஞர் ஷரீக் வயல், அவரை புகைப்படங்கள் எடுத்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து மம்மிக்காவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

    மம்மிகாவும் அவருடைய பழைய புகைப்படத்தையும், தற்போது சூப்பர் டூப்பர் மாடலாக எடுத்த புகைப்படத்தையும் கம்பேர் செய்து தனது புதிய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டு வருகிறார்.

    மம்மிகாவின் இந்த அதிரடி மாற்றத்தை அப்பகுதி மக்கள் பார்த்து வியந்து வருகின்றனர்.

    மேலும் அவரை இன்ஸ்டாகிராமில் பார்க்கும் மக்களும் கமெண்டுகளில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அதனை சாத்தியமாக்கிய ஷரிக் மற்றும் மஜ்னாஸ், ஆஷிக் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!