Viral News
அடப்பாவி..! ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை இப்படியா செய்வது- 60 வயது முதியவர் செய்த பகீர் செயல்..!!
கேரள மாநிலம் வயநாடு, மானந்தவாடி அருகே, மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை, செய்த வழக்கில், ரஹீம் என்னும் 60 வயதுடைய நபரை கேரள போலீஸார் கைது செய்தனர்.
கேரளா வயநாடு மானாதவாடி அடுத்த மூலிதோடு ஊராட்சியைச் சேர்ந்த பள்ளிக்கல் தேவஸ்யா மற்றும் மேரி ஆகியோரின் மகள் ரினி நவம்பர் 20, அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
போலீசாரின் கூற்றுப்படி, ரஹீம் ரினிக்கு விஷம் கொடுத்துள்ளார். ரினியின் தந்தையும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களது அண்டை வீட்டாரான ரஹீம், அந்த குடும்பத்தின் ஏழ்மையை பயன்படுத்தி பெண்ணை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துகொண்டார்.
ரஹீம் ஒரு ஆட்டோ டிரைவர், ரினியை அடிக்கடி தனது ஆடோவில் அழைத்துச் செல்வார்.
அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடிவு செய்து ரினியை கோழிக்கோடு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ரினி கர்ப்பமாக இருப்பதை நன்கு அறிந்தே எதாவது செய்ய வேண்டும் என்று கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து அவரை கொலை செய்துள்ளார்.
அவரை கொலை செய்த பின், தலைமறைவானார். இறுதியாக அவரை மானந்தவாடி போலீசார் தமிழகத்தின் ஏர்வாடியில் வைத்து கைது செய்தனர்.
