Connect with us

    அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயதான அவரது ஞானத்தந்தை…!!

    World News

    அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயதான அவரது ஞானத்தந்தை…!!

    அமெரிக்காவில் 18 வயது இளம்பெண்ணை 61 வயதான அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக்(61) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் 18 வயதுள்ள தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமணம் அப்பகுதியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணின் கணவரான 61 வயது மைக் ஹவுகாபுக், தேஜாவின் ஞானதந்தை ஆவார்.

    இந்நிலையில் முகநூலில் இருந்து தானும், தன் மனைவியும் விலகுவதாக மைக் ஹவுகாபுக் சில தினங்களுக்கு முன் அறிவித்துள்ளார்.

    முகநூலில் தொடர்ந்து தங்களை பற்றி பலர் அவதூறாக விமர்சிப்பதாக மைக் ஹவுகாபுக் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி பெண்கள் பலர் என் மனைவியை பார்த்து பொறாமைபடுவதால் தாங்கள் விலகுவதாக மைக் ஹவுகாபுக் கூறியுள்ளார்.

    அதே வேளையில் தன்னை இன்ஸ்டாகிராமில் பின் தொடரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தேஜா கூறியபோது “நான் யாரை பற்றியும் கவலைப்படவில்லை. இது என்னுடைய வாழ்க்கை நாங்கள் முழுமையாக வாழ்வோம்” என அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!