Viral News
65 வயது தாத்தாவை காதலித்து திருமணம் செய்த 25 வயது இளம்பெண்; என்ன காரணம் தெரியுமா???
65 வயதான தாத்தா ஒருவரை, 25 வயது இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 25). இவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் தனிமையாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது திருமணம் செய்யவும் முடிவு செய்தார்.
இதனையடுத்து மேகனாவுக்கும், சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா (65) என்ற முதியவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.இதையடுத்து தனது காதலை சங்கரண்ணாவிடம் தெரிவித்துள்ளார்.
அவரின் காதலை ஏற்றுக்கொண்ட 65 வயது முதியவர் சங்கரண்ணா பேரன் பேத்தி எடுத்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் மலர் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வை.ரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் இதனை விமர்சித்தும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
