Tamil News
“யார் கண்ணு பட்டுச்சோ”; 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 65 வயது முதியவர் தற்கொலை..!
25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது நபர் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறு, மருமகள் தொந்தராவால் தான் தற்கொலை செய்ததாக தாய் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா(50).
இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவனை பிரிந்த மோகனா (25) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சங்கரப்பா ஒரே நாளில் பிரபலமானார்.
தற்கொலை குறித்து மோகனா கூறியதாவது: நானும், என் கணவரும் நன்றாக இருந்தோம். ஆனால் என் மாமியார் 15 நாளுக்கு ஒரு முறை என்னிடம் சண்டை போட்டு வந்தார்.
அடிக்கடி என்னை வெளியில் போவதாக குற்றம் சாட்டினார். என் தாய், தந்தையுடனும் பேச அவர் விடவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் எங்களால் குடும்பம் நடத்த முடியாது என கணவர் கூறினார். அதற்கு மாமியார், ‘செத்து போ’ என என் கணவரை திட்டினார்.
இதனால் கோபத்தில் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. காலையில் தான் விஷயம் தெரிய வந்தது. நான் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளேன் என கூறினார்.
தாய் ரங்கம்மா கூறுகையில், “நேற்று முன்தினம் வயலில் மாடு மேய்த்து கொண்டிருந்தேன்.
அப்போது என் மருமகள் நாயை அவிழ்த்து விட்டார். நான் பயத்தில் கீழே விழுந்து விட்டேன். “இது சம்பந்தமாக மகனிடம் புகார் கூறினேன்.
என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு மகனிடம் மருமகள் கூறினார். குடும்ப தகராறில்தான் என் மகன் தற்கொலை செய்து கொண்டார்,” என்றார்.
