Connect with us

    அம்மாடியோவ்..! 10 மாநிலங்களில் 27 பெண்களா.!! 66 வயது முதியவரின் சித்து விளையாட்டு; கண்ணீர் விட்டு கதறும் பெண்கள்..!!

    Ramesh Kumar Swain

    Viral News

    அம்மாடியோவ்..! 10 மாநிலங்களில் 27 பெண்களா.!! 66 வயது முதியவரின் சித்து விளையாட்டு; கண்ணீர் விட்டு கதறும் பெண்கள்..!!

    ஒடிசா மாநிலத்தில் கைதான காதல் மன்னன் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Ramesh Kumar Swain

    ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டம், பட்குரா என்ற பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின் (Ramesh Kumar Swain).

    5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

    66 வயதாகும் இவர் சிறு வயது முதலே பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் குறித்து ஒரு புகார் கொடுத்தார்.

    தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரமேஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    அப்போது இவர் 14 பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

    இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மொத்தம் 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    அனைவரிடமும் தான் ஒரு டாக்டர் என கூறியுள்ளார். சர்வதேச சில பெண்களிடம் தான் ஒரு மத்திய அரசு ஊழியர் எனவும் கதை கட்டி கல்யாணம் செய்துள்ளார்.

    இவர் ஏமாற்றி திருமணம் செய்த பெண்களில் 16 பேர் அஸ்ஸாம், மத்திய பிரதேசம், பஞ்சாப், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

    இவன் ஏற்கனவே எர்ணாகுளம் மற்றும் ஹைதராபாத் போலீசாரால் ஏமாற்று வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தான்.

    இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் ஒடிசா மாநில உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் சத்பதி கூறும்போது, ‘ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை.

    தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார்.

    அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!