Connect with us

    18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்; வைரலாகும் புகைப்படம்..!

    Radhid

    World News

    18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்; வைரலாகும் புகைப்படம்..!

    பொதுவாகவே, காதலுக்குக் கண் இல்லை என்பார்கள், ஆனால் இங்கே 60 வயது வித்தியாசத்தில் ஒரு காதல் ஜோடி காதல் வயப்பட்டு திருமணம் செய்திருக்கிறார்கள்.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயது பெண்ணை 78 வயது முதியவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    Radhid

    இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் வசித்து விவசாயி வருபவர் ரஷித் மங்காகோப். இவருக்கு வயது.78.

    இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார்.

    நட்புடன் பழகி வந்த இவர்கள் இருவரும் நாளடைவில் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது.

    இவர்களது காதல் மெருகேறி இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். தற்போது அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

    இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

    இது குறித்து பேசிய ரஷித் மங்காகோப்பின் மருமகன் பென் மங்காகோப், இது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, காதல் திருமணம்.

    இருவரும் காதலித்ததால் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி, 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!