Tamil News
காய்ச்சலுக்கு ஊசி போட்ட போலி மருத்துவர்; துடிதுடித்து உயிரிழந்த 7 வயது சிறுமி; கதறிய பெற்றோர்..!
7 வயது சிறுமிக்கு, போலி மருத்துவர் ஊசி போட்டதில் சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் வசித்து வருபவர் பவுல். இவரது மகள் ஜடா (வயது 7).
சிறுமி ஜடாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறுமியின் தந்தை அப்பகுதியில் துத்திகுளம் சாலையிலுள்ள மெடிக்கல் ஒன்றிற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மெடிக்கல் உரிமையாளரான அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மனோகரன், சிறுமியின் காய்ச்சலுக்கு ஊசி போட்டுள்ளார்.
ஆனால் ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே சிறுமி திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சிறுமியின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஊசி போட்டதால் தான் சிறுமி இறந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஊசி போட்ட மருத்துவர் உரிய மருத்துவம் படிக்காமல் இதுவரை அனைவருக்கும் ஊசி போட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மருத்துவ சட்டப்பிரிவின் கீழ் போலி டாக்டரான மனோகரனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
