Connect with us

    70 மீட்டர் நீள இரும்பு கம்பியில் தொங்கியபடி 87 விநாடிகளில் கடந்து 4 வயது தமிழக சிறுமி உலக சாதனை; குவியும் பாராட்டுக்கள்..!!

    Viral News

    70 மீட்டர் நீள இரும்பு கம்பியில் தொங்கியபடி 87 விநாடிகளில் கடந்து 4 வயது தமிழக சிறுமி உலக சாதனை; குவியும் பாராட்டுக்கள்..!!

    சிதம்பரம் ராமசாமி செட்டியாா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கிடைமட்ட கம்பியில் 87 விநாடிகளில் 70 மீட்டா் கடந்த 4 வயது பள்ளி சிறுமி அனுஸ்ரீ உலக சாதனை படைத்தாா்.

    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 70 மீட்டர் தூரத்தை 87 வினாடிகள் இரும்பு கம்பியில் தொங்கியபடி கடந்து 4 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மணக்குடியான் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன் – சத்யா தம்பதியினரின் 4 வயது மகள் அனுஸ்ரீ.

    இவர் வீட்டில் உள்ள மரத்தில் ஏறுதல், மரக் கிளைகளில் தாவி செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனை அவரது பெற்றோர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

    இதனை பார்த்த சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனம், சிறுமியின் செயலை சாதனை புத்தகத்தில் இடம்பெறும் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி, சிதம்பரம் காசுக்கடை தெருவில் உள்ள பள்ளியில் நிகழ்ச்சியில், 87 வினாடிகள் இரும்பு கம்பியில் தொங்கியபடி 70 மீட்டர் தூரத்தை கந்து சென்று சிறுமி அனுஸ்ரீ சாதனை புரிந்தார்.

    இதனையடுத்து, சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனம் சார்பில், சிறுமி அனுஸ்ரீக்கு பதக்கம் அணிவித்து சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!