Viral News
54 ஆண்டுகளாக குழந்தை இல்லை; 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த பாட்டி; குவியும் பாராட்டுக்கள்..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் 70 வயது பாட்டி ஒருவர் IVF மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் Jhunjhunu கிராமத்தை சேர்ந்தவர்கள் Gopichand- Chandrawati தம்பதியினர்.
Gopichand ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
திருமணமாகி 54 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை.
இதனால் மிகுந்த கவலை கொண்டனர்.
Gopichand தன்னுடைய குடும்பத்தில் ஒரே ஆண்மகன் என்பதால் அடுத்த தலைமுறை வாரிசுக்காக காத்திருந்துள்ளனர்.
இதற்காக பல்வேறு நகரங்களுக்கு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்த போதும் பலனில்லாமல் போனது.
கடந்தாண்டு இது குறித்த ஒரு கருத்தரிப்பு மையத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய பிரச்சினைகள் குறித்து விளக்கியுள்ளார்.
வயதாகிக்கொண்டே போவதால் குழந்தை பெற்றெடுக்க முடியுமா என்ற தயக்கமும் இருந்துள்ளது.
கடைசியில் மூன்றாவது IVF சோதனையின் போது கருத்தரித்து அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
