Connect with us

  50 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த வாழ்க்கை; இனிமேல் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை கிடைக்குமா..??

  80s life

  Lifestyle

  50 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த வாழ்க்கை; இனிமேல் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை கிடைக்குமா..??

  80s life

  1. செருப்பு பிய்ந்து போனால், தைத்து போட்டுக்
  கொண்டோம்.

  2. காதலித்து திருமணம் செய்தாலும்
  கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பார்.

  3. ஆணியில் மாட்டிய கிழிந்த துணியை
  தைத்து உடுத்தி கொண்டோம்.

  4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
  சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.

  5. எல்லா கல்யாணத்திலும் மதிய உணவு பிரதானமாக இருந்தது.

  வடை பாயசத்துடன் நமது உறவினர்களே நமக்கு பாசத்துடன் பரிமாறினர்.

  6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
  எலுமிச்சை சாதமும் கட்டி எடுத்து சென்றோம்.

  7. பெரும்பாலும் பேருந்தில் தான்
  போனோம்.

  8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
  இருந்தனர்.

  9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.

  10. பாடல்களின் வரிகள் புரிந்தன.

  11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.

  12. ரஜினி கமல் ‘பொங்கல்’ வாழ்த்து அட்டைகள் வாங்கி நண்பர்களுக்கு தபாலில் அனுப்பினோம்.

  13. தீபாவளி அன்று உண்டு களித்து தியேட்டருக்கு போய் சினிமா பார்த்தோம்.

  14. காணும் பொங்கலுக்கு உறவுகளை
  பார்த்தோம்.

  15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது.

  17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
  பயந்தோம். மரியாதை கொடுத்தோம்.

  18. கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னரே உறவுகள் வந்தனர்.

  19. மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார்.

  20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு அடுத்தவர் வீட்டு வாசல் முன்பு காத்து கிடந்தோம்.

  22. ஞாயிறு மாலையில் தூர்தர்ஷனில் ஒலிபரப்பாகும் சினிமா படங்களை கறுப்பு, வெள்ளை டிவியில் பார்க்க அடுத்தவர் வீட்டுக்கு சென்று பார்த்தோம்.

  21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம்.

  22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அலைந்தோம்.

  23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம்.

  24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது.

  25. காதலை சொல்ல தயக்கம் இருந்தது.

  26. இரவு 9 மணிக்கு மேல் பாதிக் கட்டணத்தில் வெளியூரில் வசிக்கும் உறவுகளிடம் STD Booth சென்று காத்து கிடந்து பேசினோம்.

  27. வெளியூரில் கல்லூரிகளில் தங்கி படிக்கும் நமக்கு தினமும் மணியார்டர் வந்திருக்கா என போஸ்ட்மேனிடம் கேட்போம்.

  28. தெருக்களில் கோலிக்குண்டு, சில்லாங்குங்சி, கண்ணாமூச்சி, கபடி விளையாடி மகிழ்ந்தோம்.

  29. தந்தை தந்த 10 பைசாவுக்கு ஆரஞ்சு வில்லை வாங்கினோம்.

  30. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்டோம்.

  இவ்வாறு இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இனிமையான வாழ்க்கை அப்போது இருந்தது.

  ஆனால், இப்போதோ முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.

  நாகரீகப் போா்வை போா்த்தி நாசமாய் போனோம்.

  அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!

  இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது.

  இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது.

  Continue Reading
  To Top
  error: Content is protected !!