World News
16 வயது சிறுவனின் முதுகில் இருந்து முளைத்த 70 செமீ நீளமுள்ள வால்; தெய்வப்பிறவி என நினைத்து வழிபட தொடங்கிய மக்கள்..!!
நேபாள நாட்டை சேர்ந்தவர் தேஷாந்த், (வயது.16). இவர் பிறந்த போதே இவருடைய தண்டு வடத்தின் அடிப்பகுதியில் இருந்து முடி முளைத்து வருகிறது.
தற்போது 70 செமீ வளர்ந்திருக்கும் முடியை வெட்ட விரும்பவில்லை என்கிறார் தேஷாந்த்.
இவர் பிறந்த போதே அவருடைய பின்புறத்தில் முடி முளைத்திருப்பதை பார்த்த பெற்றோர் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல பின்புறம் இருந்த முடியும் வளர துவங்கியதும் தேஷாந்தின் பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.
இதனை அடுத்து தனது மகனை உள்ளூர் மருத்துவமனைகள் முதல் வெளிநாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த மருத்துவ நிபுணர்களிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள் அந்த பெற்றோர்.
பல பரிசோதனைகளுக்கு பிறகும் அதிகாரியின் பின் புறத்தில் முடி வளர்வதற்கான காரணம் குறித்து யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.
இதனால் தன்னுடைய முடியை உடைகளுக்குள் மறைத்து வைக்கும் பழக்கம் தேஷாந்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போது தன்னுடைய 70 செமீ நீளமுள்ள முடியை தேஷாந்த் மறைப்பதில்லை. அதற்கு காரணம் அனுமார் தான்.
மருத்துவமனைகளில் காட்டியும் தனது மகனுடைய சிக்கலுக்கு தீர்வு கிடைக்காததால் கவலையடைந்த இவரின் பெற்றோர் உள்ளூரில் இருக்கும் ஆன்மீக தலைவர் ஒருவரை சந்தித்து இதுகுறித்து கேட்டிருக்கின்றனர்.
அப்போது, தேஷாந்த் அதீத சக்திகள் கொண்ட அனுமாரின் மறுபிறவி என்றும் முடியை வெட்டவோ சீப்பு கொண்டு சீவவோ கூடாது என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தேஷாந்திற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருக்கலாம் எனவும் ஆன்மீக தலைவர் கூறியதாக சொல்லப்படுகிறது
இதனையடுத்து தேஷாந்தின் பெற்றோர் மருத்துவமனைகளுக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
அக்கம் பக்கத்தினரும் தேஷாந்தை அனுமாரின் மறுபிறவியாகவே கருதுகிறார்களாம்.
இதனால், தேஷாந்த் தன்னுடைய முடியை மறைப்பதையும் நிறுத்திவிட்டார்.
முதுகில் இருந்து வினோதமான முறையில் சிறுவனுக்கு முடி முளைத்த சம்பவம் குறித்து பலரும் சமூக வலை தங்களில் வைரலாக பேசிவருகின்றனர்.
