Tamil News
தங்கைக்கு தாயாக மாறிய அண்ணன்; பிஞ்சு குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுக்கும் சிறுவனின் வீடியோ காட்சி வைரல்..!
தங்கைக்கு அம்மாவாக மாறிய அண்ணணின் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது.
திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார்.
அதே போல்தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.
அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம்.
வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர்.
இதோ இங்கே அதற்கெல்லாம் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாகவே சின்னக் குழந்தைகளுக்கு வயிற்றுவலி வராமல் இருக்க போனிசம் கொடுப்பது வழக்கம். இங்கே ஒரு பொடியன் தன் தங்கைக்கு அந்த மருந்தைக் கொடுக்கிறான்.
அவன் பாசமிகுதியில் தன் தங்கைக்கு மருந்து கொடுத்து, பொறுப்பும், அக்கறையுமாக கவனித்துக் கொள்வது பார்ப்பவர்களை உருக வைக்கிறது.
நீங்களே பாருங்களேன். பாசத்தில் சிலிர்த்துப் போவீர்கள்.
