Viral News
ஆண்டுக்கு 50 லட்சம் வரை சம்பாதிக்கும் எருமை மாடு…!! சந்தோஷத்தில் விவசாயி..! எப்படி தெரியுமா..?
‘மேய்க்குறது எருமை…அதுல என்னடா பெருமை?’ என ஒரு டயலாக் கிராமங்களில் ரொம்பவும் பேமஸ்.
எருமையை பொதுவாக நம்மவர்கள் உதாசீனமாகவே சொல்வார்கள்.
உதாரணமாக நல்லா படிக்காவிட்டால் எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என சொல்வார்கள்.
யாரையாவது திட்டும் போதும் அவர்கள் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்தால் எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல் என்பது போன்ற பழமொழிகளை சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
ஆனால் இனி இப்படியெல்லாம் எருமையை இந்த செய்தியைப் படித்தால் திட்ட மாட்டீர்கள்.
காரணம் இருக்கிறது. எருமை மாடு ஒன்று அதை வளர்க்கும் விவசாயிக்கு ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதித்துக் கொடுக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி அர்விந்த் ஜாங்கிட்.
இவர் பீம் என்னும் உயர் ரகத்தைச் சேர்ந்த எருமை மாடு ஒன்றை வளர்க்கிறார்.
இந்த எருமை 1500 கிலோ அதாங்க ஒன்றரை டன் எடையுடன் உள்ளது.
இதை ஒவ்வொரு மாதமும் பராமரிக்க மட்டும் அர்விந்த் ஜாங்கிட்டிற்கு ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை செலவாகுமாம்.
இந்த எருமையின் விந்து வெறும் 25 மில்லி விலை 500 ரூபாய்.
இவர் வருடத்துக்கு 2500 மில்லி வரை விந்தை விற்று 50 லட்சம் சம்பாதித்துவருகிறார்.
இந்த பீம் ரக எருமையின் விந்து மூலம் பிறக்கும் எருமைகள் வளர்ந்ததும் தினமும் 30 லிட்டர் வரை பால் கறக்கிறது.
இதேபோல் வழக்கமான எருமைகளைவிட அதிக எடையுடனும் வருகிறது. இதை ஒரு கோடீஸ்வரர் 24 கோடி ரூபாய்க்கு விலைக்குக் கேட்டுள்ளார்.
ஆனாலும் இதை இப்போது வைத்திருக்கும் விவசாயி கொடுக்கவில்லையாம்.
இனி யாராவது எருமை எனத் திட்டினால் பீம் எருமையோடு ஒப்பிட்டு பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள்
