Viral News
தெருவில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகை; வெளியான அதிர்ச்சி வீடியோ..!
கோடீஸ்வரியும், பிரபல இந்தி திரைப்பட நடிகையுமான நுபுர் அலங்கர் தெருக்களில் பிச்சை எடுத்து வரும் வைரல் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தித் திரையுலகில் பிரபலமான நடிகை நுபுர் அலங்கர். சோனாலி கேபிள், ராஜா ஜி, சாவரியா, உட்பட பல படங்களில் நடித்த இவர் கர் கி லக்ஷ்மி பெட்டியான், தியா அவுர் பாத்தி ஹம், சக்திமான் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்
சுமார் 27 வருடங்களாக நடித்துவரும் இவருடைய கணவர் அலங்கர் ஸ்ரீவத்சவாவும் நடிகர்.
49 வயதான நடிகை நுபுர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் இருந்து விலகி சந்நியாசி ஆகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்
நுபுர் அலங்காரின் சொத்து மதிப்பு networthpost தகவலின்படி ரூ. 6,56,97,01,200.00 ஆகும். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார்.
சினிமாவில் இனிமேல் தான் நடிக்க மாட்டேன் என்றும் வாழ்க்கையில் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது உத்திரப்பிரதேசம் கோவர்தனில் உள்ள தங்கடி அருகே நுபுர் அலங்கர் காவி உடை அணிந்து பிச்சை எடுத்தபடி இருக்கும் புகைப்படமும் வீடியோவும் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வீடியோவில் நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுவதைக் காணலாம். வீடியோவைத் தவிர, நுபுர் தனது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஒரு புகைப்படத்தில் நுபுர் ஒருவரிடமிருந்து பிச்சை எடுப்பதைக் காணலாம், மற்றொரு புகைப்படத்தில் அவர் தனது பிச்சைக் கிண்ணத்தைப் பகிர்ந்துள்ளார்,
பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என கூறுகிறார் அந்த கோடீஸ்வரர்..!
