Cinema
திருமணம் முடிந்த பின் திருப்பதி சென்ற நயன்தாராவின் கையை பிடித்து இழுத்த இளைஞர்; கோபத்தில் நயன் செய்த செயல்…!
தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்
இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில் நேற்று முன்தினம் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.
இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்
கேரளாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு செண்டமேளத்திற்காக வரவழைக்கப்பட்டனர்.
மும்பையிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.
திருமண மண்டபத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை.
QR கோடு ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாரூக்கான் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் திருமணம் முடிந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள்.
இருவரும் தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்த போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தார்கள்.
அவர்களுக்கு போஸ் கொடுக்க நயன்தாரா நின்ற போது பின்னால் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று நயன்தாராவின் கையை பிடித்தார்.
இதனால் கடுப்பான நயன்தாரா அவரை ஒரு முறை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
