Tamil News
24 வருடங்களுக்கு முன் கணவர் உயிரிழந்த நிலையில், மீன் கழுவும் வேலை செய்து மகளை டாக்டராக்கிய ஒரு சாதனை தாய்..!
கணவனை உயிரிழந்த நிலையில் 24 வருடங்கள் தனியொரு பெண்ணாக மாற்றுத்திறனாளி மகனுடன் பல போராட்டங்களை கடந்து, மீன் கழுவும் வேலை செய்து தனது மகளை டாக்டருக்கு படிக்க வைத்துள்ளார் சாதனை பெண்மணி ஒருவர்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
24 ஆண்டுகளுக்கு முன்பு ரமணியின் கணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.
உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீனை கழுவி சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது, 2, 3 ரூபாய் வாங்கிய ரமணி தற்போது, 50 ரூபாய் வரை பணம் வாங்கி குடும்பத்தை நடத்தி வருகிறார்.
ஒரே மகளான விஜயலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்தார் ரமணி.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்துள்ளார்.
தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து விட்டு மருத்துவராய் தமிழகம் திரும்பியுள்ளார் விஜயலட்சுமி.
இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகார தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக தீவிரமாக பயின்று வருகிறார்.
இதனால் நாள்தோறும் 8 மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் வேலையை செய்து வருகிறார் ரமணி.
இது குறித்து ரமணி கூறுகையில், கடவுளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், எனது 2 கைகளை மட்டும் விட்டுவிடு.
கைகள் இருந்தால் இன்னும் நாள் முழுக்க பல கஷ்டங்கள் பட்டாலும், என் பிள்ளையை காப்பாற்றி, என் மகளை மருத்துவராக ஒரு இடத்தில் அமர வைத்து விடுவேன் என்று கண்ணீருடன் கூறுகிறார்.
