Tamil News
“வெந்து தணிந்தது காடு; ரஞ்சித் கண்ணன்- சகாய ஜெரின் கல்யாணத்திற்கு வாழ்த்துக்களை போடு” – வைரலாகும் வித்தியாசமான திருமண அழைப்பிதழ்..!!
மதுரையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் – சகாய ஜெரின் ஆகியோரின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்.
அப்படி அந்த ஒரு நாளில் நடக்கும் நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்குள் அனைவருமே திக்குமுக்காடி விடுவர்.
வீட்டை கட்டிப் பார், கல்யாணம் முடித்துப் பார் என்ற பழமொழி கூட உண்டு.
திருமணம் என்றால் பலரின் கூட்டு முயற்சிதான் அங்கே அங்கம் வகிக்கும்.
திருமணம் என்ற பேச்சு அடிபட்டவுடனே அந்த வீடு களைகட்டிவிடும்.
உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பல்வேறு பணிகளை எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருவர்.
திருமண பத்திரிகை அடிக்க நாள் பார்த்து, ஐயரிடம் நேரம் கேட்டு, பஞ்சாங்கம் பார்த்து, மங்களப் பொருள்கள் வைத்து என பல்வேறு வேலைகள் மும்முரமாக நடக்கும்.
மேலும் திருமணத்தில் நடனமாடுவது, கேக் வெட்டுவது, க்ரியேட்டிவாக எதாவது செய்வது, ரிமோட் கார், ஃபீடிங் பாட்டில் போன்றவற்றை மேடையில் பரிசாக கொடுத்து கேலி செய்வது என பல பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
திருமண நாளில் மட்டும் தான் வித்தியாசமாக எதையும் செய்யவேண்டுமா, திருமண அழைப்பிதழிலும் வித்தியாசத்தை காட்டுவோம் என்று இப்போதைய இளைஞர்கள் ஆரம்பித்துவிட்டனர்.
மற்றவர்களை காட்டிலும் தங்களது திருமண அழைப்பிதழ் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
சமீப காலமாகவே இணையத்தில் பல வித்தியாசமான திருமண அழைப்பிதழ்கள் வைரலாகி வருகிறது.
முன்னர் வட மாநிலத்தில் பறவைக்கூடு போல செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் பிரபலமானது.
பல காமெடியான உரைகள் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்கள் என வைரலானது.
சமீபத்தில் மாத்திரை அட்டை வடிவத்தில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் வைரலாக நிலையில், தற்போது ஒரு நகைச்சுவையான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையை சேர்ந்த ரஞ்சித் கண்ணன்-சகாய ஜெரின் ஆகியோரின் திருமண அழைப்பிதழ் தான் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் அவர் நடிகர்களை திருமணத்திற்கு அழைக்கும் பொருட்டு அவர்களுடன் காமெடியாக உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
குறிப்பாக அந்த திருமண அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் பண்ணி வைப்பதே பெருசு என்கிற வசனம் பல 90ஸ் கிட்ஸ்களின் மனதை கலங்கடிக்கிறது,
இந்த திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
