Connect with us

    திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மணமகள்; திடீர் மணமகள் ஆன அத்தை மகள்; திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் மணமகன் எடுத்த பகீர் முடிவு…!

    Married guy

    Tamil News

    திருமணத்தன்று ஓட்டம் பிடித்த மணமகள்; திடீர் மணமகள் ஆன அத்தை மகள்; திருமணம் முடிந்த மூன்றே நாட்களில் மணமகன் எடுத்த பகீர் முடிவு…!

    திண்டிவனம் அருகே திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏ‌ற்படுத்தியுள்ளது‌.

    Married guy

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன்.

    இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனிடையே அந்த பெண் வேறு ஒரு நபரை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்.

    இதனால் உறவினர்கள் அவசர அவசரமாக ஏப்பாக்கத்தில் உள்ள குமரேசனின் அத்தை மகளை அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    திருமணத்திற்குப் பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதியம் புதூர் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருமணமாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!