Connect with us

    ஆட்டோ ஓட்டுநராக பெரும் சவாலுடன் சாதிக்கும் இளம்பெண்; குவியும் பாராட்டுக்கள்..!

    Lady auto driver

    Viral News

    ஆட்டோ ஓட்டுநராக பெரும் சவாலுடன் சாதிக்கும் இளம்பெண்; குவியும் பாராட்டுக்கள்..!

    Lady auto driver

    இன்று ஆட்டோவிற்காக கைகாட்டியபோது எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வந்து நின்ற ஆட்டோவினுள் புன்னகையுடன் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லிம் பெண்.

    திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் அருகே செல்ல வேண்டும் என்றவுடன், சென்னை ஆட்டோ டிரைவர்களுக்கே உரிய பேரம் பேசுதல் இல்லாமல், தலையசைத்து உடனே ஏற்றிக்கொண்டார்.

    ஆச்சரியத்திலிருந்து விடுபட்டு அவரோடு பேச ஆரம்பித்தேன்.

    வியாசர்பாடியைச் சார்ந்த, மூன்று குழந்தைகளுக்கு தாயான பியாரி பாத்திமா ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தது கடந்த 6 மாதங்களாகத்தான்.

    ஆட்டோ டிரைவிங்கை தனது கணவரிடம் கற்றுக் கொண்டவர் ரோட்டரி கிளப் உதவியுடன் முறைப்படி கற்று லைசன்ஸ் வாங்கி இப்பொழுது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

    ஒரு நாள் ஆட்டோவிற்கான வாடகை 200 ரூபாய்.

    காலையில் 10 மணிக்கு சவாரி ஆரம்பித்து இரவு 8.30 வரை ஓட்டுவராம். செலவு போக குறைந்தது 500 ரூபாய் அன்றாடம் கிடைக்கும் என்கிறார்.

    கணவர் திருப்பூரில் வேன் டிரைவராக பணி புரிகிறார்.

    சென்னை தெருக்களில் ஆட்டோ ஓட்டுவது, எந்த பிரச்சனைகளுமின்றி திருப்திகரமாக உள்ளது என்கிறார்.

    யாரையும் அண்டி வாழ வேண்டியதில்லை. அதுவே  மகிழ்ச்சி என்கிறார்..

    Continue Reading
    To Top
    error: Content is protected !!