Viral News
ஒரே நேரத்தில் இரு பெண் போலீசுடன் கள்ளக்காதல், உல்லாசம் கொண்டிருந்த ஏட்டு; இறுதியில் நேர்ந்த விபரீதம்..!
கள்ளக்காதல் போட்டியில் பெண் போலீஸ் காரில் கடத்தப்பட்டு கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஹிலியூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சுதா (37) இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
இதேபோல் அதே காவல் நிலையத்தில் மற்றொரு ஏட்டாக பணிபுரிபவர் ராணி (30) இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இவர்கள் இருவரும் பெங்களூரில், ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தனக்கு போட்டியாக இருந்த சுதாவின் கதையை முடிக்க ராணி முடிவு செய்தார்.
இதனால் சுதாவின் உறவினரான மஞ்சுநாத் என்பவரிடம் கொலை செய்ய ராணி பேரம் பேசினார், சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது.
சுதாவை கொலை செய்ய மஞ்சுநாத் நேரம் பார்த்துக் காத்திருந்தார். ஆனால் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.
இந்நிலையில் சுதாவை கொன்றே ஆக வேண்டும் இல்லையென்றால் நடப்பது வேறு என மஞ்சுநாத்தை ராணி மிரட்டினார்.
இதனால் எப்படியாவது சுதாவை கொல்ல வேண்டும் என மஞ்சுநாத் தீவிரமாக இறங்கினார்.
தனது நண்பன் விஜயையும் தன்னுடன் சேர்ந்துக் கொண்டு சுதாவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.
கடந்த செப்டம்பர் 13ம் தேதி மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த சுதாவை, காரில் விடுவதாக கூறி, நிகில் அழைத்து சென்றார்.
செல்லும் வழியில், மஞ்சுநாத்தும் ஏறிக் கொண்டார்.
சிறிது துாரத்தில், சுதாவின் கண்ணில் மிளகாய் பொடி, ‘ஸ்பிரே’ அடித்து, அவரது மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்தனர்
அவரது உடலை திப்டூர் – அரிசிகரே ரயில் தண்டவாளம் அருகில் புதரில் வீசிவிட்டு சென்றனர்.
சுதாவை கொன்றதால் பயத்தில் இருந்த மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஏட்டு ராணி, நிகிலை போலீசார் கைது செய்தனர். ராணியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த ஏட்டு யார் என்பது குறித்து, விசாரணை நடக்கிறது.
