Tamil News
பல பெண்களை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த தனது கணவரை, நேர்மையுடன் போலீசில் பிடித்து கொடுத்த பெண்…!!
பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் தனது மச்சினிச்சியை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரை அவரது மனைவியே போலீசில் பிடித்து கொடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை அருகே மார்க்கெட் ஃபார்ம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர்.
இவர் அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பிரித்திகா. இவர்கள் வசிக்கும் அதே குடியிருப்பில் தான் பிரித்திகாவின் சகோதரி லட்சுமியும் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஒருநாள், தனது மனைவியின் சகோதரியான லட்சுமியை அவருக்கே தெரியாமல் ஆபாசமாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதனை தெரிந்து கொண்ட லட்சுமி, இது பற்றி தனது சகோதரி பிரித்திகாவிடம் அழுது கொண்டே முறையிட்டிருக்கிறார்.
இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே போன பிரித்திகா, தனது கணவர் சேகரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து பார்த்து இருக்கிறார்.
அப்போது அவருக்கு ஒரே அதிர்ச்சி. தனது தங்கை மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார் சேகர்.
இதை இப்படியே விட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று நினைத்த பிரித்திகா அந்த செல்போனை எடுத்துக்கொண்டு போய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்து, தன் கணவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்.
காவல் ஆய்வாளர் ஷீலா மேரி, இந்த புகாரை பெற்றுக் கொண்டு சேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆபாச வீடியோக்கள் எடுத்தது கணவர் தான் என்று தெரிந்தும் அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்த பிரித்திகாவை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
