Connect with us

    தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்பாமல் வேறு நபருக்கு தவறுதலாக அனுப்பிய பெண்; கண்ணீருடன் பணத்தை திருப்பி தர கோரி சமூக வலைத்தளத்தில் பதிவு..!!

    Fahada Bistari

    World News

    தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்பாமல் வேறு நபருக்கு தவறுதலாக அனுப்பிய பெண்; கண்ணீருடன் பணத்தை திருப்பி தர கோரி சமூக வலைத்தளத்தில் பதிவு..!!

    Fahada Bistari

    பொதுவாக அனைவருக்கும் நன்றாக படித்து ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும்.

    அதுவும் ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்து விட்டால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து நன்கு படித்து நல்ல வேலைக்கு வந்து குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என எண்ணுவதுண்டு.

    அதற்கேற்றார் போல பிள்ளைகளும் படித்து வேலைக்கு சேர்ந்தவுடன் தாங்கள் வாங்கும் முதல் மாத சம்பளத்தை தனது தாயிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவர்.

    அந்த வகையில் வெளியூரில் வேலைக்கு சேர்ந்த பெண் ஒருவர் தான் பெற்ற முதல் மாத சம்பளத்தை தனது தாயின் வங்கி கணக்கிற்கு அனுப்பாமல், தவறுதலாக வேறு ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மேலும், அந்த பெண் அந்த நபரின் முகவரி தெரியாமல் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது பணத்தை திருப்பி தரக்கோரி கண்ணீருடன் அந்த கோரிக்கை வைத்து பதிவிட்டது அனைவரின் கண்களையும் குளமாக்கி விட்டது.

    மலேசியாவை சேர்ந்தவர் Fahada Bistari. இவர் சமீபத்தில் டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, சமீபத்தில் அவர் தனது முதல் மாத சம்பளத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தனது தாயின் வங்கி கணக்கிற்கும் ஆன்லைன் மூலம் அவர் மாற்றி அனுப்ப முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

    அந்த சமயத்தில் தான் கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது. அதாவது, தாயின் வங்கி கணக்கில் மாற்றி அனுப்புவதற்கு பதிலாக, முன்பின் தெரியாத ஒரு நபரின் வங்கி கணக்கில் Fahada Bistari பணத்தை அனுப்பி உள்ளார்.

    முதல் மாத சம்பளம் கிடைத்த உற்சாகத்தில் இருந்த Fahada, சரியாக கவனிக்காமல் இந்த தவறினை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

    இதன் பின்னர், சம்மந்தப்பட்ட நபரின் எண்ணும் Fahada-வுக்கு கிடைத்துள்ள நிலையில், அதற்கு அழைத்து பணம் தவறுதலாக வந்த விஷயத்தை விவரித்து பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

    ஆனால், அந்த நபரோ ஒரு நன்கொடையாக நினைத்துக் கொண்டு விட்டு விடவும் கூறி உள்ளார்.

    இதனால் மனம் நொந்து போன Fahada, இது தொடர்பான வீடியோ ஒன்றையும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

    தனக்கு கிடைத்த சம்பளம் சற்று குறைவாக இருந்ததாகவும் இதனால் அதனை தாய்க்கு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் கண்ணீருடன் கூறி உள்ளார்.

    மேலும், இந்த சம்பவத்தால் தான் ஒரு சிறந்த பாடம் கற்றுக் கொண்டதாகவும் Fahada குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அடுத்த சில தினங்களுக்கு பிறகு, அந்த நபர் பெண்ணின் நிலையை எண்ணி, பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேலும், வங்கி கணக்கில் பணம் அனுப்பும் போது கவனத்துடன் அனுப்ப வேண்டும் என்றும் Fahada குறிப்பிட்டுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!