Viral News
1,00,000 வாலா பட்டாசுகளால் காரை மூடி தீ வைத்த Youtuber; கொதிக்கும் நெட்டிசன்கள்..!
நம்மில் பலருக்கும் கார் வாங்குவது ஒரு கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் பிரபல youtuber ஒருவர் தான் வாங்கிய காரை 1,00,000 வாலா பட்டாசுகளால் வெடிக்க வைத்து நாசமாக்கிய சம்பவம் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வண்ண, வண்ண ஆடைகள் உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து உலகம் முழுவதும் தீபாவளியை மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த சில வாரங்களாக தீபாவளியையொட்டி கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்தது. துணி கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தீபாவளிக்கு முன்னதாக, youtuber ஒருவர் 1,00,000 பட்டாசுகளை காரை சுற்றி கட்டி வைத்து Happy Diwali என்று கூறி அந்த பட்டாசுகளை தீ வைத்து வெடிக்க வைத்தார்.
கார் முழுவதும் பட்டாசுகள் பட்… பட்.. என்று சரவெடியாய் வெடித்துச் சிதறியது.
இதை வீடியோவாக எடுத்து அந்த Youtuber சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. பலர் இதைப் பார்த்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
