World News
50 வருஷமா நடுக்காட்டில் நிற்கும் மர்ம ரயில்; அருகில் சென்றால் புகை வரும் ஆச்சரியம்..!
பிரிட்டனில் உள்ள காட்டுப் பகுதியில் 50 ஆண்டுகளாக தனியாக நிற்கும் ரயிலை ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார்.
பிரிட்டனின் சஃபோல்க் கிராமப்புறத்தில் உள்ள காடுகளில் இந்த ரயில் நிற்கிறது.
ஹாரி பாட்டர் படத்தில் வரும் மர்ம ரயில் போலவே காட்சியளிக்கும் இந்த நீராவி ரயில் கடந்த 1950 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கேண்டிநேவியா பகுதியில் உள்ள பின்லாந்தில் இந்த ரயில் கட்டப்பட்டிருக்கிறது. இதனிடையே இங்கிலாந்தின் சுகாதார துறையில் நோயியல் தகவல் அதிகாரியாக பணிபுரியும் ஸ்டீவ் என்பவர் சமீபத்தில் இந்த ரயிலை கண்டுபிடித்திருக்கிறார்.
சுற்றிலும் மரங்கள் அடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரயிலை கண்டதும் ஒருநிமிடம் ஸ்டீவ் ஆடிப்போய்விட்டாராம்.
இதுபற்றி பேசுகையில்,”இந்த நீராவி ரயில் எனது சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இதைக் கண்டுபிடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சி மற்றும் வரைபட ஸ்கேனிங் செய்யப்பட்டது. இது இப்போது முட்புதர்களால் சூழ்ந்திருக்கிறது.
இந்த ரயில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் அருகில் சென்றதும் புகை மற்றும் எண்ணெய் வாசனை வருவதாக ஸ்டீவ் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த ரயிலில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
