Viral News
மனைவியின் அந்தரங்க நடவடிக்கைகளை கண்காணிக்க பெட்ரூமில் கேமரா வைத்த கணவன்; கோபத்தில் மனைவி செய்த விபரீத செயல்..!!
பெட்ரூமில் கேமரா பொருத்துவது, கட்டிலுக்கு அடியில் வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட சைக்கோ கணவனால் இன்னலுக்கு ஆளான பெண் ஊடகவியலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுருதி( வயது 36).
இவர் பெங்களூருவில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், கேரளா தலிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான நாளிலிருந்தே அனீஸ் சுருதியிடம் சந்தேகத்துடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
படுக்கையறைக்குள் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதேபோல் குடும்ப சண்டையின் பொழுது இரண்டு முறை சிருதியை கொலை செய்யவும் அனீஸ் முயன்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை சுருதியின் தயார் செல்போனில் அழைத்த போதும் சுருதி செல்போனை எடுக்கவில்லை.
இதனால் பயந்துபோன அவரின் தாயார் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிக்கு போன் செய்து இந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.
உடனே காவலாளி சென்று பார்க்கும் போது சுருதி தங்கியிருந்த வீட்டில் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவை திறக்கவில்லை.
இதனால் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்து பார்த்த பொழுது சுருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சைக்கோ கணவன் அனீஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுருதி தற்கொலை செய்வதற்கு முன் தன் கணவருக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், நான் என் வாழ்க்கையை முடிக்கப் போகிறேன், இரண்டு பேர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். நீங்களும் நானும்.
மேலும், தன் கணவன் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் காது கேளாத மற்றும் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படியும், 20 நிமிடங்களுக்கு மேல் அவனது சித்திரவதையை யாராலும் தாங்க முடியாது.
‘இந்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து நான் தப்பிப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
உங்கள் வாழ்க்கையில் நான் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்’ என்று மார்ச் 20ஆம் தேதி எழுதிய தற்கொலை கடித்தத்தில் அவர் கூறியுள்ளார்.
அந்த வீட்டில் இருந்து மூன்று விதமான தற்கொலைக் கடிதங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பெங்களூரு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
