Connect with us

    ஆன்டி மாதிரி இருந்த வரலட்சுமி, திடீரென்று 16 வயது கட்டழகி போல் மாறிய அதிசயம்..!

    Cinema

    ஆன்டி மாதிரி இருந்த வரலட்சுமி, திடீரென்று 16 வயது கட்டழகி போல் மாறிய அதிசயம்..!

    தற்போது சினிமாவில் வாரிசு நடிகர்களை தாண்டி வாரிசு நடிகைகளும் படங்களில் நடித்தி வருகின்றனர்.

    அந்த வகையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி யை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.

    Varalaxmi

    சரத்குமாரை உரித்து வைத்தாற்போல் அப்படியே இருக்கும் வரலக்ஷ்மி படங்களிலும் அவருக்கு சற்றும் நடிப்பில் குறையாமல் நடித்து வருகிறார்.

    36-வயதான வரலக்ஷ்மி வெளிநாட்டில் கல்லூரி படிப்பை முடித்து நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன கலையை கற்று கொண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

    இந்நிலையில் வரலக்ஷ்மி பிரபல இயக்குனர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிக்க தேர்வானார்.

    மேலும் சரோஜா, காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

    இந்நிலையில் 2012-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

    அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

    இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வரலக்ஷ்மி.

    தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.

    மேலும் இவர் நிபுணன், சண்டகோழி 2, மாரி 2, சத்யா,ச ர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

    வரலக்ஷ்மிக்கு கதாநாயகி கேரக்டரை விட நெகட்டிவ் கதாபாத்திரங்களே அற்புதமாக பொருந்துகிறது.

    அவரது உடல் தோற்றத்துக்கும் மிடுக்கான நடிப்புக்கும் வில்லன் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பபடுகிறது.

    சர்கார் படத்தில் விஜய்க்கு எதிராக இவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இவருக்கு தனி ஒரு அடையாளத்தை பெற்று தந்தது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

    இவருக்கு பலமே இவரது உடலமைப்பு தான் இந்த நிலையில் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்துள்ள வரலக்ஷ்மி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

    அந்த புகைப்படத்தில் வரலக்ஷ்மி தாவணி பாவாடையில் கொடுத்திருக்கும் போஸை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

    Varalaxmi

    Varalaxmi

    எப்பொழுதும் மாடர்ன் உடையில் உலாவும் வரலக்ஷ்மியின் இந்த மாற்றம் எதற்கு என புரியாமல் தவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!