Cinema
“சார் ஒரு செல்பி; ஸாரி மா, ஃப்ளைட்டுக்கு டைம் ஆய்டுச்சு” – ஏர்போர்ட்டில் செல்பி கேட்ட ரசிகைக்கு கூலாக பதில் சொன்ன தல அஜித்…!
தமிழ் திரை உலகில் “தல” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்.
தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் அபிமான நாயகராக திகழ்ந்து கொண்டு உள்ளார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.
இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.
இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.
இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார்.
தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்
இந்நிலையில் தற்போது அஜித் AK 61 கெட் அப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அஜித் ஏர்போட்டில் இருந்து வெளியேற முற்படுகையில் வாசல் அருகே ரசிகை ஒருவர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கிறார்.
ஆனால் வாசல் அருகே எடுத்தால் அங்கே கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த ரசிகையிடம் அஜித் பணிவாக மறுத்துவிட்டு அவரிடம் ‘sorry’ சொல்லிவிட்டு செல்கிறார்.
ஆனால் அதன் பின்னர் விமான நிலையம் உள்ளே பல ரசிகர்களுடன் சேர்ந்து அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
