Cinema
இதயக்கோளாறு காரணமாக நடிகர் போண்டா மணி அரசு மருத்துவமனையில் அனுமதி..!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
58 வயதாகும் போண்டா மணி, தமிழ் சினிமாவில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.
கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல கலக்கலான நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் போண்டா மணி.
இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன். சினிமாவுக்காக போண்டா மணி என மாற்றிக்கொண்டார்.
இவருக்கு 2003-ல் திருமணம் நடைபெற்றது. சாய் குமாரி, சாய் ராம் என இரு குழந்தைகள் உண்டு.
சாய் கலைக்கூடம் என்கிற பெயரில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
திரையுலகில் சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
