Sports News
சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று அசத்திய நடிகர் மாதவன் மகன்; குவியும் பாராட்டுக்கள்..!!
நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் சாக்லெட் பாய் என அன்பாக அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன்.
இவர் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பல மொழிகளில் அவர் நடித்துள்ளதால், இந்தியா முழுவதும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அவரது ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயங்களாகும். ‘இறுதிச்சுற்று’ ‘விக்ரம் வேதா’ ஆகிய அவரது சமீபத்திய படங்கள் அவரது நடிப்புக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக அமைந்தன.
பாக்சிங் பயிற்சியாளராகவும் காவல் துறை அதிகாரியாகவும் இரு படங்களிலும் அவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை கடந்த 1999ஆம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.
16 வயதான வேதாந்த் மாதவன் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் வேதாந்த். இதில் வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வேதாந்த் பங்குபெற்று இருந்தார்.
இதில் இவர் 7 பதக்கங்களை வென்று அசத்தினார்.
இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வேதாந்த் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தன் மனைவியுடன் துபாய்க்கு குடி பெயர்ந்திருந்தார்.
இந்நிலையில் டென்மார்க்
தலைநகர் கோபன்ஹேகனில் (copenhagen) நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் பங்கேற்ற வேதாந்த் மாதவன், 1500 மீட்டர் free பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்தியாவின முன்னணி நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ், ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று அதிரடி சாதனை படைத்துள்ளார்.
தனது மகனின் சாதனை குறித்து நடிகர் மாதவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:
அதில், கடவுளின் கருணையால், அனைவரின் ஆசிர்வாதத்துடன் இவர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
வேதாந்த் மற்றும் சாஜன் பிரகாஷின் பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
