Sports News
தேசிய ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் மாதவன் மகன் வேதாந்த்…!!
நடிகர் மாதவனின் மகன் சர்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில் தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ் திரையுலகில் சாக்லெட் பாய் என அன்பாக அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன்.
இவர் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், பல மொழிகளில் அவர் நடித்துள்ளதால், இந்தியா முழுவதும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அவரது ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவை ரசிகர்களுக்கு அவரிடம் பிடித்த விஷயங்களாகும். ‘இறுதிச்சுற்று’ ‘விக்ரம் வேதா’ ஆகிய அவரது சமீபத்திய படங்கள் அவரது நடிப்புக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக அமைந்தன.
பாக்சிங் பயிற்சியாளராகவும் காவல் துறை அதிகாரியாகவும் இரு படங்களிலும் அவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை கடந்த 1999ஆம் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார்.
16 வயதான வேதாந்த் மாதவன் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.
மேலும், இவர் பல நீச்சல் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.
தற்போது புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் 48-வது ஜூனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் சிறுவர்களுக்கான குரூப்1-ல் 1,500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் மாதவன் பந்தய தூரத்தை 16:01.73 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியில் மகாராஷ்டிரா சார்பில் வேதாந்த் களமிறங்கியிருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த அத்வைத் பந்தய தூரத்தை 16:06.43 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
இதை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் வேதாந்த்.
16:21:98 விநாடிகளில் இலக்கை அடைந்த கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷ் வெள்ளிப் பதக்கமும், மேற்கு வங்கத்தின் சுபோஜித் குப்தா (16:34:06) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
