Cinema
வாக்களிக்க வந்த இடத்தில் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் (Actor Vijay); வைரல் வீடியோ உள்ளே..!!
வாக்களிக்க வந்த இடத்தில் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய் (Actor Vijay). சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.
காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7.00 மணி முதலே தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்
அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை கூட்டிய நடிகர் விஜய் தற்போது சிவப்பு நிற காரில் வாக்களிக்க வந்தார்.
சென்னை மாநகராட்சி 192-வது வார்டுக்கு உட்பட்ட நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்ய நடிகர் விஜய் வந்தார்.
இவரின் வருகையை ஒட்டி வாக்குச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்த அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க உதவினார்.
விஜய் வாக்களிக்க வந்ததால் அங்கு வரிசையில் நின்றிருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு தள்ளு முள்ளானது.
இதை பார்த்த விஜய் அவர்களிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கள் வேகமாக பரவி வருகிறது.
தாம் வாக்களிக்க வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்பு கோரிய நடிகர் @actorvijay pic.twitter.com/AFVJ3kOaLb
— Mathiyazhagan Arumugam (@Mathireporter) February 19, 2022
