Connect with us

    எப்படி இருந்த நடிகை அஞ்சலி இப்படி மாறிட்டாங்களே; ஷாக்கான ரசிகர்கள்..!

    Cinema

    எப்படி இருந்த நடிகை அஞ்சலி இப்படி மாறிட்டாங்களே; ஷாக்கான ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கற்றது தமிழ் , அங்காடித் தெரு போன்ற தரமான நல்ல திரைப்படங்கள் மூலம் நல்ல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் நடிகை அஞ்சலி.

    Anjali

    அதன் பிறகு சரியான பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

    அவ்வப்போது சேட்டை, உங்காத்தா உள்ளிட்ட படங்களில் இரண்டாம் ஹீரோயின் போன்ற வகைகளில் நடித்திருந்தாலும், எங்கேயும் எப்போதும், கககலப்பு, மாப்ள சிங்கம் உள்ளிட்ட படஙக்ளில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

    இடையில் சிங்கம் இரண்டாம் பாகத்தில் கூட முதல் பாடலுக்கு குத்தாட்டம் ஆடி இருந்தார்.

    அதன் பிறகு அப்படி ஆடுவதை நிறுத்தி கொண்டார்.

    ஆனால் தற்போது வெளியான தகவல் என்னவென்றால், பட வாய்ப்புகள் அஞ்சலிக்கு சுத்தமாக இல்லையாம்.

    அதன் காரணமாக தற்போது சமந்தா ஊ சொல்றியா பாடலுக்கு ஆடியது போல, ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவதற்கு சம்மதித்துள்ளாராம்.

    தெலுங்கு நடிகர் நிதின் நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஒரே ஒரு குத்தாட்டம் ஆடுவதற்கு அஞ்சலி ரெடியாகி உள்ளார்.

    இதற்கான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதில் குத்தாட்டம் ஆடுவதற்கு உரிய ஆடை அணிந்து இருக்கிறார் அஞ்சலி.

    Anjali

    நல்ல திறமையான நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதே என்று பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

    தங்களது ஆஸ்தான நடிகை குத்தாட்டம் ஆடும் நிலைமைக்கு வந்து விட்டாரே என்று அஞ்சலி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!