Cinema
பட வாய்ப்புக்காக இப்படியுமா? கயல் ஆனந்தியின் புகைப்படம் பார்த்து ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் கயல் ஆனந்தி.
இவர் 2012ம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
இவர் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் 2014ம் ஆண்டு பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, பரியேறும்பெருமாள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இவர் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சமீபத்தில் நடித்த மன்னர்வகையறா படம் மிகப்பெரிய வெற்றி படமாக உருமாறியது.
இப்படத்தில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனையடுத்து அவர் ரூபா, குண்டு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்பு தற்போது இல்லாத நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
மேலும், சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி காட்சிகளில் இதில் நடிக்கவுள்ளாராம் அம்மணி.
சமீபத்தில் வெளியான ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற படத்தில் கிளுகிளு காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார் அம்மணி.
அதனை தொடர்ந்து, வெப் சீரிஸில் இன்னும் ஒரு படி மேலே சென்று கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார்
கயல் ஆனந்தி என்ற தகவலை அறிந்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியா…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
